Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிழ் நாடு பள்ளி சமச்சீர் கல்வி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

Special TET - Updates - துறை முன் அனுமதி மற்றும் NOC சான்று

துறை முன் அனுமதி மற்றும் NOC சான்று

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 / தாள் 2 எழுத துறை அனுமதி வேண்டுதல் மற்றும் தடையின்மை சான்று வழங்க வேண்டுதல் சார்ந்தது.

Click Here to Download - NOC Application For Teachers Writing TET - Paper 1 & 2 - Pdf

மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக (60 மதிப்பெண்கள்) குறைத்து அரசாணை

School Education - Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - Fixing of minimum qualifying marks for the category of Persons with Disability - Orders

ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக (60 மதிப்பெண்கள்) குறைத்து அரசாணை வெளியீடு - பொதுப் பிரிவினருக்கான தேர்ச்சி சதவீதத்தில் மாற்றமில்லை!

👇👇👇👇

G.O(Ms)No.46 - Disabled Pass in TET - Download here

அரசாணை விவரம்

📢 TNTET தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு! 📢

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை இன்று (25.02.2026) வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி (G.O.(MS) No.46), தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET) மாற்றுத்திறனாளிகளுக்கான (Persons with Disability) குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்ச்சி மதிப்பெண் விவரம்:

🔹 மாற்றுத்திறனாளிகள் (PWD):

முன்னர் 50% (75 மதிப்பெண்கள்) ஆக இருந்த தேர்ச்சி மதிப்பெண், தற்போது 40% ஆக (அதாவது 150-க்கு 60 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய மதிப்பெண் விவரம்:

பொதுப்பிரிவு (General): 60% (90 மதிப்பெண்கள்)

BC, BC(M), MBC, DNC: 50% (75 மதிப்பெண்கள்)

SC, SC(A), ST & PWD: 40% (60 மதிப்பெண்கள்) ✅

முக்கிய குறிப்பு:

இந்த புதிய தளர்வு, TRB அறிவிப்பு எண். 3/25 (11.08.2025) மற்றும் 1/26 (13.02.2026) ஆகிய அறிவிப்புகளின் கீழ் நடத்தப்பட்ட/நடத்தப்படும் தேர்வுகளுக்கும் பொருந்தும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணி நாடுநர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நற்செய்தி! 

service certificate பெற annexure 1 ந நிரப்பினால் போதும்

பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு தேர்ச்சி பெற அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் போது அனுமதி கடிதம் & Annexure-1 மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என தெளிவான விளக்கம் தொடக்கக்கல்வித் துறை இணை இயக்குநர் மற்றும் (மாவட்ட கல்வி அலுவலர்) மூலமாக அளிக்கப்பட்டுள்ளது. 

பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் தேர்வு எழுத விரும்பும் ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு இணைப்பு 1(Annexure- I) இல் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து சார்ந்த ஆசிரியர் கையொப்பம் வட்டாரக்கல்வி அலுவலர் கையொப்பம் மற்றும் முகப்புக் கடிதத்துடன் 2 படிகளில் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு பார்வை 2 கண்ட இணைய வழிக் கூட்ட அறிவுரையின் அடிப்படையில் அனைத்து வட்டரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

TET பணிச்சான்று ( Service Certificate ) பெற்றிட இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின

TET பணிச்சான்று ( Service Certificate ) பெற்றிட இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் விவரங்கள் சார்ந்து திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

TETக்கு விண்ணப்பிக்க பணிச்சான்று பெறுவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் - மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள், நாள்: 17-02-2026

Attachments to be attached to obtain Service Certificate to apply for TET - Proceedings of District Education Officers, Date: 17-02-2026

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பணிச்சான்று வழங்குவதற்கு இணைக்க வேண்டிய இணைப்புகள் குறித்தான சிவகங்கை & இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் கடிதம் நாள்: 17.02.2026

>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2026

அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை - DEOs Proceedings

பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வி வாரிய அறிக்கையின்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2026 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் (Online)இல் ஆசிரியர் விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், இப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1 மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருந்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்)

1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர்

2. கையொப்பத்துடன் Annexure 1 - இரு நகல்களில்

3. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்ப கடிதம்

4. பணி நியமன ஆணை நகல்

5. பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

6. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

8. TET தாள் 1/ TET தாள் 2 உரிய கல்வித் தகுதித் சான்று நகல்கள்

No comments:

Post a Comment