Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிழ் நாடு பள்ளி சமச்சீர் கல்வி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

TET 2025 ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி மதிப்பெண் மாற்றம்

TET தகுதி மதிப்பெண் சார்ந்து TRB வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிக்கைகள் (Addendums)!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025 ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I 15.11.2025 அன்றும் தாள்-II 16.11.2025 அன்றும் நடத்தப்பட்டது.

அடிப்படையில் OMR அரசாணை (நிலை) எண். 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள்:28.01.2026 ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்கள் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் 30.01.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு 02.02.2026 பி.ப முதல் தகுதிச் சான்றுகள் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசாணை (நிலை) எண் : 46 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள் : 25.02.2026 ல் மாற்றுத்திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வரசாணையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை 6103/2025 வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் பொருந்தும் எனத் நாள்:11.08.2025ன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட அரசாணையின் அடிப்படையில் மாற்றுத் திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு TET தேர்வில் தகுதி பெறுவதற்கு குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் 60 (or) 40% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த மாற்றுத்திறனாளி என்ற விவரத்தின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மேலும், தகுதி பெற்ற தேர்வர்கள் தங்களது தகுதிச் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) 28.02.2026 முற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது

TET தகுதி மதிப்பெண் சார்ந்து TRB வெளியிட்டுள்ள பிற்சேர்க்கை அறிவிக்கைகள் (Addendums)!

 ஆசிரியர் தேர்வு அறிவிக்கை : டிசம்பர் 03, 2025 நாள்: 11.08.2025-இன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள்-1 15.11.2025 அன்றும், தாள்-II 16.11.2025 அன்றும் நடைபெற்றன.

அரசாணை (நிலை) எண். 23, பள்ளிக்கல்வித்துறை, நாள். 28.01.2026ன்படி. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் கீழ்கண்டவாறு அரசால் மாற்றி அமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment