Tamil nadu school samacheer kavi, teacher, student related information
தமிழ் நாடு பள்ளி சமச்சீர் கல்வி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்

Hot Topics
Standard wise
Term wise
Subjects
medium of instructions
School Exams
Leave
Forms
Government Websites
Office related
Exams
Jobs News
Laws and Orders
Various

பொதுத் தேர்வில் - எழுத்துபவர்களாக (Scribes) - பள்ளி ஆசிரியர் - நியமிக்க அரசு உத்தரவு!

பொதுத் தேர்வில் சொல்வதை எழுத்துபவர்களாக (Scribes) பள்ளி ஆசிரியர்களையே நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

பொதுத் தேர்வில் சொல்வதை எழுத்துபவர்களாக (Scribes) பள்ளி ஆசிரியர்களையே நியமிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

மார்ச் / ஏப்ரல் 2026 இல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகளில் கடந்த ஆண்டினைப் போலவே அரசாணை (நிலை) எண் 54, பள்ளிக் கல்வி (பொது1) துறை, நாள் 29.02.2016 மற்றும் அரசாணை (நிலை) எண் 62, பள்ளிக் கல்வி (அ.தே) துறை, நாள் 25.03.2022 ஆகியவற்றைப் பின்பற்றியே சொல்வதை எழுதுபவர்கள் (Scribes) நியமிக்கப்பட உள்ளனர். எனவே, முந்தைய ஆண்டுகளைப் போல ஆசிரியர்களை சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

சொல்வதை எழுதுபவர் (Scriber)- கல்லூரி மாணவர்கள் - இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை நியமனம்



பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர் (Scriber) பணிக்கு கல்லூரி மாணவர்கள் / இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை நியமனம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! - For the role of a scribe in public examinations, college students or volunteers from the 'Education at Doorstep' program can be appointed - Order from the Director of Government Examinations!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பார்வைச் சவால் கொண்ட மாணவர்கள் சொல்வதை எழுதுபவராக Scriber பணிக்கு ஆசிரியர் பட்டயச் சான்றிதழ், ஆசிரியர் பட்டச் சான்றிதழ், தொழிற்கல்வி, கலை அறிவியல் பட்டம் படிக்கும் 2ம் ஆண்டு மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்திக் கொள்ளளாம்

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களையும் சொல்வதை எழுதுவோராக நியமனம் செய்யலாம்

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்ற தன்னார்வல கல்லூரி மாணவர்களையே நடைபெறவிருக்கும் பொதுத்தேர்விற்கு சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்க வேண்டும்.

4) மார்ச்/ஏப்ரல் 2026, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு முன் தற்போது நடைபெறவுள்ள திருப்புதல் தேர்விற்கும் மேற்காண் பயிற்சி பெற்ற தன்னார்வல கல்லூரி மாணவர்களையே சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களுக்கான பணிகள் பற்றி பயிற்சி பெற ஏதுவாக அமையும்.

5) திருப்புதல் தேர்விற்கு சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்கப்பட்ட தன்னார்வல கல்லூரி மாணவர்களை எக்காரணம் கொண்டும் வரும் பொதுத்தேர்விற்கு அதே தேர்வருக்கு மீண்டும் சொல்வதை எழுதுபவராக நியமிக்கக் கூடாது. பயிற்சி பெற்ற வேறு தன்னார்வல கல்லூரி மாணவர்களையே சொல்வதை எழுதுபவராக நியமிக்க வேண்டும்.

6) புறவுலகச் சிந்தனை குறைபாடு (Autism) உள்ள மாணவர்களுக்கு Special B.Ed.. பயிலும் மாணவர்கள் அல்லது சிறப்பு பயிற்றுநர்களை சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

7) இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களையும் சொல்வதை எழுதுபவர்களாக நியமனம் செய்யலாம்

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD DGE - Appointment of Scribe Letter PDF

No comments:

Post a Comment